பயனுள்ள பல தகவல்கள் உங்களுக்காக !!!

நீ வெற்றிக்காக போராடும்போது வீண் முயற்சி என்று சொல்பவர்கள்...
நீ வெற்றி பெற்றபின்
விடா முயற்சி என்பார்கள்...
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்...
செய்ய முடியாதவன் போதிக்கிறான்...
விட்டுக் கொடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும்...
தட்டிக் கொடுங்கள் தவறுகள் குறையும்...
மனம் விட்டுப் பேசுங்கள் அன்பு பெருகும்...

சைனஸ் பிரச்சனைக்கும் தலைவலிக்கும் தீர்வு!

•   கல் உப்பு + மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க வேண்டும்.

•   நொச்சி இலையை ஆவி பிடிக்க தலைவலி நீங்கும்.

•   சுண்ணாம்பு + மஞ்சள் நெற்றி மூக்கு ஆகிய இடங்களில் பூச வேண்டும்.

•   மஞ்சளையும் சுண்ணாம்பையும் சேர்த்து நெற்றியில் பற்றுபோட தலைவலி மற்றும் சைனஸ் பிரச்சனை குறையும்.

•   பூண்டு தண்ணீரில் கொதிக்கவைத்து பின் மஞ்சள்தூள் சேர்த்து குடிக்க வேண்டும்.

•   துளசி + வெற்றிலை + மிளகு + புதினா சேர்த்து ஆவி பிடிக்கலாம்.

•   வேப்பிலையும் மஞ்சள்தூளையும் சேர்த்து ஆவி பிடிக்கலாம்.

•   தும்பை இலையை சாறுப்பிலிந்து மூன்று சொட்டு வீதம் இரண்டு மூக்கிலும் விட எப்படிப்பட்ட தலைவலியும் நின்றுவிடும். பின் தும்பையிலயை சேர்த்து ஆவி பிடிக்க வேண்டும்.

•   வேப்பிலை + துளசி + வெற்றிலை + அதிமதுரம் + திப்பிலி  + மிளகு + சீரகம் + சுக்கு ஆகியவற்றை சேர்த்து சூரணம் செய்து சாப்பிடலாம்.

•   திரிகடுக சூரணம் (டேப்லெட்) = சுக்கு + மிளகு + திப்பிலி சாப்பிட சரியாகும்.

•   மஞ்சள் + இஞ்சி + தேன் கலந்த சாறு குடிக்கலாம்.

•   கருஞ்சீரகம் துணியில் முடிந்து கொண்டு மூச்சுவிட சிரமப்படும் வேளையில் அதை சுவாசிக்கவும்.

•   மூன்று விரலி (அ) கொம்பு மஞ்சளை விளக்கெண்ணெயில் மூழ்க வைத்து மூன்றுநாள் ஆனவுடன் அந்த மஞ்சளை வெயிலிலே ஒருநாள் காய வைக்கவும். அதை ஒரு பாட்டிலில் நன்றாக மூடி வைக்கவும். அதை இரவில் நெருப்பில் காட்டி அதன் புகையை எந்த மூக்கில் அடைப்பு உள்ளதோ அந்த மூக்கின்வழியாக நன்றாக அந்த புகையை உள்ளே இழுக்கவும். இப்படி அந்த மூன்று மஞ்சளையும் பயன்படுத்த மூக்கடைப்பு முற்றிலும் சரியாகும்.

•   மஞ்சள் வேப்பிலை துளசி தூதுவளை ஆடத்தொடா எல்லாம் 100 கிராம் அளவு எடுத்து கொள்ளவும் 50கிராம் சுக்கு மிளகு ஆகியவை பொடியாக்கி 2 ஸ்பூன் தேன் கலந்து காலை மற்றும் மாலை என தொடர்நது சில மாதங்கள் சாப்பிட சைனஸ் தொந்தரவு முழுவதும் சரியாகிவிடும்.

•   நெற்றியில் நீர்கோர்த்து விட்டால் மஞ்சள் 1 ஸ்பூன் + சுண்ணாம்பு 1/4 ஸ்பூன் சேர்த்து நெற்றி மட்டும் மூக்கின்மேல் தடைவி தூங்க வேண்டும்.

•   நல்லெண்ணெயை காய்ச்சி அதில் 25 முதல் 30 தும்பைப்பூவையும் கால் தேக்கரண்டி ஓமத்தையும் போட்டு காய்ச்ச வேண்டும். அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளிக்க வேண்டும். அவ்வாறு குளித்துவந்தால் தலைவலி அனைத்தும் சரியாகிவிடும்.

•   உலர்த்திய தும்பையிலையையும் (3 பங்கு) மிளகையும் (1 பங்கு) சேர்த்து அரைத்து அந்த சூரணத்தை காலை மாலை சாப்பிடுவதற்கு கால்மணிநேர்த்திற்கு முன்  சாப்பிட வேண்டும்.

•   கசகசா அரைத்து தேன் கலந்து சாப்பிடலாம். ஆடாதோடை இலை வேர் நெல்லிமுள்ளி எடுத்து பாலில் ஊறவைத்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்துவர நரைமுடி கருமையாகும்.

•   சைனஸ் பிரச்சனைக்கு அதிமருந்து இந்த குப்பைமேனி. 2 ஸ்பூன் தண்ணீருடன் 10 இலைகளை சுத்தம்செய்து 1 ஸ்பூனாக சுண்டக்க்காய்ச்சி ஆறவைத்து காலையோ அல்லது மாலையோ தொடர்ந்து ஒருமாதம் சாப்பிட்டுவர மூக்கு ஒழுகல் சரியாகிவிடும்.

•   இருமல் மற்றும் சளியால்  மூச்சு விடமுடியாமல் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சரியான அளவில் சிறிதளவு கொடுத்து வந்தால் சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும்.

•   சொறி அறிப்புக்கு கும்ப்பைமேனி இலையுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து 2 ஸ்பூன் தேங்காயெண்ணெயில் வதக்கி 1 ஸ்பூனாக மாற்றி ஆறவைத்து எங்கு அரிப்பு இருக்கிறதோ அங்கு ஒருவாரம் தடவிவர அரிப்பு சரியாகும்.

•   www.tabletwise.com -- similar to 1mg app.

No comments:

Post a Comment