பயனுள்ள பல தகவல்கள் உங்களுக்காக !!!

நீ வெற்றிக்காக போராடும்போது வீண் முயற்சி என்று சொல்பவர்கள்...
நீ வெற்றி பெற்றபின்
விடா முயற்சி என்பார்கள்...
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்...
செய்ய முடியாதவன் போதிக்கிறான்...
விட்டுக் கொடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும்...
தட்டிக் கொடுங்கள் தவறுகள் குறையும்...
மனம் விட்டுப் பேசுங்கள் அன்பு பெருகும்...

நன்றி சொல்லுங்கள் நல்லதே நடக்கும்!

• நன்றி சொல்லும்போது அதை உண்மையாக சொல்லுங்கள்.

• நன்றியைத் தெளிவாகவும் திருத்தமாகவும் சொல்லுங்கள்.

• நன்றி சொல்லும் போது வார்த்தைகளை விழுங்காதீர்கள். முணுமுணுக்காதீர்கள்.

• மகிழ்ச்சியுடன் நன்றி சொல்வது, உங்களின் சொல்லில் வெளிப்பட வேண்டும்.

• நன்றி சொல்பவரை, நேருக்கு நேர் அவர் கண்களைப் பார்த்துச்சொல்லுங்கள்.

• நேருக்கு நேர் பார்ப்பது, கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும். நன்றிக்கு உரியவர் பார்க்கவும் கூடியவராவர்.

• நன்றி சொல்லும் போது அவர்களின் பெயரையும் சேர்த்துச் சொல்லுங்கள்.

தனிப்பட்ட தனியொருவருக்கானதாக இருக்கும்படி நன்றியைப் பெயருடன் சேர்த்துச் சொல்லுங்கள் .

• நன்றி என்றுசொல்வதை விட நன்றி ராணி என்பது வித்தியாசமாகவும், கூடுதல் நெருக்கத்துடனும் இருக்கும்.

• காலத்தைக் கணித்து நன்றி சொல்லுங்கள்.

• உங்கள் பாராட்டை, நன்றியைக் கூற சரியான நேரத்தைப் பார்த்துத் தேர்வு செய்யுங்கள்.

• சாதாரணமானவர்கள் வெளிப்படையாகத் தெரிபவற்றுக்கு மட்டும் நன்றி சொல்வார்கள்.

உயர்ந்தவர்கள் வெளிப்படையாகத் தெரியாத உதவிகளையும் அறிந்து நன்றி சொல்வார்கள்.

• சரியான இடத்தில் முறையாக நன்றி சொல்லும் பழக்கம் உங்களுக்கு ஒரு வாழ்நாள் முழுமைக்குமான சொத்தாக இருக்கும்.

நன்றி சொல்வோம் இவர்களுக்கு....

      *நாள்தோறும் அதிகாலையில் பேப்பர் போடும் பையனுக்கு..

      *பூக்கள் விற்கும் சிறுமிக்கு..

      *தொலைதூரப் பேருந்துகளில் ஓட்டுநருக்கு..

      *தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு..

      *ஓட்டலில் பணிபுரியும் சர்வருக்கு..

'நல்லதே நினைப்போம்; நல்லதே செய்வோம்; நல்லதே நடக்கும் என்று நம்புவோம்'

No comments:

Post a Comment