பயனுள்ள பல தகவல்கள் உங்களுக்காக !!!

நீ வெற்றிக்காக போராடும்போது வீண் முயற்சி என்று சொல்பவர்கள்...
நீ வெற்றி பெற்றபின்
விடா முயற்சி என்பார்கள்...
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்...
செய்ய முடியாதவன் போதிக்கிறான்...
விட்டுக் கொடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும்...
தட்டிக் கொடுங்கள் தவறுகள் குறையும்...
மனம் விட்டுப் பேசுங்கள் அன்பு பெருகும்...

சித்தர்கோயில் பற்றிய தகவல்

வரலாற்று சிறப்புமிக்க சித்தர்கோயில் பற்றிய தகவல்



சித்தர்கோயில் (sitherkovil), சேலம் மாவட்டம் கஞ்சமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும். சேலம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் சித்தர்கோயில் உள்ளது. இங்கு இக்கோவிலை உருவாக்கிய காலங்கிநாதர் என்ற சித்தர் சமாதிநிலை அடைந்துள்ளார். இவர் பழனியில் முருகன் சிலையை உருவாக்கிய போகரின் குரு ஆவார். இங்கு ஒரு முருகன் கோவிலும் உள்ளது. திருவண்ணாமலையைப் போலவே இங்கும் பௌர்ணமி தினத்தில் கிரிவலம் நடைபெறுகிறது. அமாவாசை நாட்கள் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

பதினென் சித்தர்களில் ஒருவரான கலங்கானி சித்தரின் ஜீவசமாதி அமைந்துள்ள இடமான கஞ்சமலை மலைசரிவு பகுதியில் அமைந்துள்ளது இக்கோவில். இது சேலத்திலிருந்து இளம்பிள்ளை செல்லும் வழியில் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

சித்தர்கோயில் பழனி முருகன் சிலையை உருவாக்கிய போகரின் குரு ஆவார். கஞ்சமலையின் பயனம்@a1salemmedia356 - YouTube

புத்துணர்ச்சி தரும் சித்தர்கோயில் மூலிகைக்குளியல்...!

சேலம் டூ இளம்பிள்ளை செல்லும் வழியில் உள்ள அமாவாசைக்கோயில் என்றழைக்கப்படும் ஸ்ரீசித்தேஸ்வரா சுவாமி அருள்புரியும் சித்தர்கோயில் பழமையான சக்திவாய்ந்த கோயில். அங்குள்ள ஊத்துக்கிணறுகளில்  பக்தர்களின் மூலிகைக்குளியல் தனிமகத்துவம் வாய்ந்தது..!  இரும்புத்தாது கனிம வளங்கள் நிறைந்த கஞ்சமலை அடிவாரத்தில் இக்கோயிலும், இந்த கிணறுகளும் அமைந்துள்ளதால்  இயற்கையாகவே அந்த நீரில் இரும்புச்சத்துகளும், அந்த மலைத்தொடரில் மருத்துவக்குணம் வாய்ந்த அரிய மூலிகைச்செடிகள்  இருப்பதால் மருத்துவகுணங்களும் நிறைந்துள்ளது...! அங்கு வாடகைக்கு கிடைக்கும் பக்கெட்களை வாங்கி கொண்டு , எண்ணெய் தேய்த்து ,தலைக்கு சீயக்காய் போட்டு நண்பர்களுடன் ஆடி பாடிக்கொண்டே பக்கெட் பக்கெட்டாக மூலிகை நீரை செய்தி குளிப்பது மிகவும் ஆனந்தமானது. மணிக்கணக்கில்  நேரம் போவதே தெரியாமல் ஆனந்தக்குளியல் போட்ட அனுபவங்கள் சுகமானவை. நீரில் இரும்புசத்து காரணமாக சரும நோய் உள்ளவர்கள் மூன்று அமாவாசைகள் தொடர்ந்து குளித்து ,கோயில் அருகிலுள்ள கிணற்றில. உப்பு,மிளகு வாங்கி போட்டால் சரும நோய்கள் குணமாகிவிடும்..! மூலிகை மருத்துவகுணங்கள் காரணமாக அளவிடமுடியாத புத்துணர்ச்சி உடம்புக்கும் மனசுக்கும் கிடைக்கும்..! சித்த மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெறுபவர்களை குழுவாக அழைத்து வந்து பஞ்சகல்பம் எனப்படும் ஐந்து அரிய மூலிகைகளை கொண்டு தயாரித்த சாறை உடலில் பூசிக்கொண்டு பின் குளியல் போடுவதால் அவர்கள் விரைவில் நலம் பெறுகிறார்கள்.வானரங்களுடன் நகைச்சுவையான அனுபவங்களும் உண்டு..!

சுகமாய் குளித்து பின் ஸ்ரீசித்தேஸ்வர சுவாமி, 

ஸ்ரீகாளியம்மன், குன்றின் மீது இருக்கும் ஸ்ரீஞான பாலதண்டாயுதபாணி தெய்வங்களை தரிசிப்பது மரபு..! சுவாமி தரிசனம் முடிந்தவுடன் அனைவரும் நல்ல பசி எடுக்கும் . இங்குள்ள  பெரியம்மா கடை பணியாரம் சூப்பரா சுவையா இருக்கும்..! தாகம் தீர்க்க நுங்கு கிடைக்கும்..!  இதுவரை இந்த மூலிகைக்குளியல் அனுபவம் இல்லாதவர்கள் அவசியம் சென்று குளித்து , புத்துணர்ச்சியும் ஸ்ரீசித்தேஸ்வர சுவாமியின்அருளையும் பெறுங்கள்.

அமாவாசை நன்னாளில் அமாவாசை கோயிலை பற்றி பதிவிட்டது ஸ்ரீசித்தேஸ்வர சுவாமி, ஸ்ரீஞான பாலதண்டாயுதபாணி அருளாலே யான் பெற்ற வாய்ப்பு..!

No comments:

Post a Comment