பயனுள்ள பல தகவல்கள் உங்களுக்காக !!!

நீ வெற்றிக்காக போராடும்போது வீண் முயற்சி என்று சொல்பவர்கள்...
நீ வெற்றி பெற்றபின்
விடா முயற்சி என்பார்கள்...
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்...
செய்ய முடியாதவன் போதிக்கிறான்...
விட்டுக் கொடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும்...
தட்டிக் கொடுங்கள் தவறுகள் குறையும்...
மனம் விட்டுப் பேசுங்கள் அன்பு பெருகும்...

நொச்சி இலையின் மருத்துவ பயன்கள்!

நொச்சி இலையின் மருத்துவ பயன்கள்

நொச்சியில் குறிப்பிடத்தக்கது வெண் நொச்சி, கரு நொச்சி, நீர் நொச்சி ஆகும். கருநொச்சி சித்தமருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த செடியின் வேர், பட்டை, விதை, பூக்கள் என முழுத்தாவரமுமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. நொச்சியின் வேர்ப்பகுதிக்கு பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது. 

முருங்கை மரம், வாழைமரம், வேப்பமரம் போலவே, இந்த நொச்சி செடியும் மருத்துவ குணங்கள் வாய்ந்தவை.. அதாவது, இந்த செடியின் வேர், பட்டை, விதை, பூக்கள் என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை..

நொச்சியிலைகளை எரித்து, அந்த புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் ஓடிவிடும். இந்த இலைகளுடன் மிளகு, பூண்டு, கிராம்பு சேர்த்து மென்று தின்றாலே ஆஸ்துமா மெல்ல குணமாகிவிடும்.

நுரையீரலின் பாதுகாவலன்: இந்தக்கீரையை "நுரையீரலின் பாதுகாவலன்" என்று சொல்லலாம். சுவாசப்பாதையை சீராக்குவதில் இந்த இலைகளுக்கு பெரும்பங்கு உண்டு.. காரணம், சளி, மூக்கடைப்பு, சைனஸ், தலைவலி, நீர்க்கோவை போன்ற பிரச்சனைகளைக்கு பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது.

நீரை கொதிக்கவைத்து, இந்த இலைகளுடன் கற்பூரவல்லி இலையையும் சேர்த்து, ஆவி பிடித்தாலே, நெஞ்சு சளி கரைய ஆரம்பித்துவிடும். அல்லது குளிக்கும் வெந்நீரில், வேப்பிலையை போலவே, இந்த இலையையும் சேர்த்து குளித்து வரலாம்.. கடும் தலைவலி இருந்தாலும்கூட, இந்த இலைகளை, எரித்து அதன் புகையை சுவாசித்தாலே, தலைவலியும், தலைபாரமும் சேர்த்து குணமாகும்.

சிலர் இந்த இலையின் சாற்றினை, தலைமுடிக்கு பயன்படுத்துவார்கள்.. அதாவது, நொச்சி இலையிலிருந்து சாறு எடுத்து, அதனை நல்லெண்ணெய்யுடன் காய்ச்சி, ஓரளவு சூட்டிலேயே அந்த எண்ணெய்யைக்கலவையை தலைக்கு குளித்து வந்தால், நரம்பு கோளாறுகளும், கழுத்து வலியும் நீங்கும்.

சைனஸ் தலைவலி இருப்பவர்க்கள் நொச்சி இலையுடன் சிறிது அளவு சுக்கு சேர்த்து அரைத்து தலையில் பற்று போட்டால் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். எதுவுமே இல்லையென்றாலும் நொச்சி இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி நல்ல சூடு பதம் இருக்கும் போதே துணியில் முடிந்து அதைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தாலும் வலி உபாதை கப நோயான இரைப்பு நோ இருப்பவர்கள் நொச்சி இலையுடன் மிளகு பூண்டு, இலவங்கம் சேர்த்து அப்படியே சாப்பிட்டாலோ அல்லது கஷாயமாக்கி குடித்தாலே இரைப்பு நோய் தீவிரமாகாமல் குறையும். நொச்சி இலையில் நல்லெண்ணெய் தேய்த்து குளித்துவந்தால் பீனிச நோய்கள், ஒற்றைத்தலைவலி சேர்ந்து குறையும்.

இடுப்பு வலி: உடல்வலி, தசைவலிகளுக்கு தீர்வு தருகிறது இந்த இலைகள்.. 2 கைப்பிடி நொச்சி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் குளித்தாலே, உடல் அசதி நீங்கிவிடும்.. ஸ்பூன் நொச்சி இலைச்சாற்றில், 1 கிராம் மிளகுத்தூள், நெய் சேர்த்து தினமும் 2 வேளை சாப்பிட்டால், மூட்டுவலி முதல் இடுப்பு வலி வரை குணமாகும். மூட்டுவலிக்கு மிகச்சிறந்த மருந்தாக இது திகழ்கிறது.. உடலில் வீக்கங்கள், புண்கள் இருந்தால், இந்த இலைகளை அரைத்து பூசினால் பலன்கிடைக்கும். கை, கால் முட்டி வலி இருந்தாலும்கூட, இந்த இலையை கசக்கி துணியில் வைத்து கட்டினாலே, அந்த வலிகள் மெல்ல குறைய துவங்கும். அதேபோல, தூக்கம் குறைபாடு உள்ளவர்கள், இந்த நொச்சி இலைகளை, தலையணை உறைக்குள் வைத்து படுத்தால், நிம்மதியான தூக்கம் வரும்..

இந்த நொச்சி இலைகளை, தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, அந்த நீரில் பிரசவித்த தாய்மார்களை, குளிக்க வைப்பார்கள்.. இதனால், உடல்லி, அசதிகள் போன்ற குறைபாடுகள் நீங்கும்.. நரம்புகளுக்கும் வலுவேற்ற உதவும்.. இந்த இலைகள் மாதவிலக்கை தூண்டக்கூடியது. மாதவிலக்கு பிரச்சனை: நொச்சி இலையுடன் வேப்பிலையும் சேர்த்து எரித்து புகை போட்டால், கொசுக்களும், சிறுபூச்சிகளும் ஓடிவிடும்.. வயிற்றுப் புழுக்களை கொல்லக்கூடியது.. வயிற்றுப்புழுக்களை மட்டுமல்ல, பாம்பின் விஷத்தையும் முறிக்கக்கூடியது.. இந்த இலையின் சாறுகளை முகத்தில் தடவிவந்தால், பருக்கள், கொப்புளங்கள், அல்லது தேமல்கள் மறைந்துவிடும்.

உடலுக்கு புத்துணர்ச்சி தேவையாக இருந்தால் நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் பனைவெல்லம் கலந்து குடித்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

தலைவலி மற்றும் சளியால் வரும் மூக்கடைப்புக்கு தீர்வாக நொச்சி இலை பயன்படுகிறது. எல்லோருக்குமானது நொச்சி இலையை காயவைத்து பொடித்து வைக்கவும். சற்று அகலம் குறைந்த மண் சட்டியில் நெருப்பை மூட்டி தணலாக்கி அதில் நொச்சி பொடிகளை சேர்த்து அதிலிருந்து வரும் புகையை சுவாசிக்க நல்ல பலன் கிடைக்கும்.

நொச்சி இலையை கசக்கி அதன் சாறை சுத்தமான வெள்ளைதுணியில் போட்டு அதை மூக்கில் முகர்ந்துவந்தாலும் மூக்கடைப்பு நீங்கும். சிறு பிள்ளைகளுக்கும் இந்த முறையை பின்பற்றலாம். நொச்சி இலை சாறை மூக்கின் மேல் தடவி பற்று போன்றும் போடலாம்.

தலையில் நீர் கோர்வை, மண்டையில் நீர் கோர்வை, தலைபாரம் பிரச்சனை இருப்பவர்கள் வேதுபிடித்தால் நல்லபலன் கிடைக்கும் என்றார்கள். நொச்சி இலை கொண்டு ஆவி பிடிப்பதன் மூலம் மண்டையோட்டில் இருக்கும் நீர் முழுக்க வியர்வையாகி வெளிப்படும். சுவாச பாதையையும் சுத்தம் செய்யப்படும்.

உடலில் இருக்க்கும் நச்சை வியர்வையாய் வெளியேற்ற உதவுகிறது. மூக்கடைப்பு இருந்தாலும் அவை சீராகும். அதிகளவு குளிர்காய்ச்சலால் அவதிப்பட்டாலும் நொச்சி இலை கொண்டு வேது பிடிப்பதன் மூலம் காய்ச்சலின் தீவிரம் மெல்ல மெல்ல தணியும்.

நொச்சி இலையை துணியில் அடைத்து அதை தலையணையாக பயன்படுத்தினால் தூக்கம் நன்றாக வரும். சைனஸ் இருப்பவர்கள் தினசரி இந்த தலையணை பயன்படுத்தினாலே பலன் கிடைக்கும். கழுத்துவலி, கழுட்தில் நெறிகட்டுதல், நரம்பு கோளாறுகளால் கழுத்துவலி என அவதிப்படுபவர்களுக்கு இந்த தலையணை மருத்துவம் கைகொடுக்கும்.


மூட்டுவலி இருப்பவர்கள் நொச்சி இலைச்சாறை மூட்டுகளின் மீது தடவி வந்தாலும் வலி குறையும். புண்களின் மீது இதன் சாறை தடவி வந்தால் சீழ் வரும் நிலையில் இருக்கும் புண்களை கூட ஆற்றும். இதன் இலைச்சாறை கொண்டு தயாரிக்கப்படும் தைலத்தை காய்ச்சி வைத்துகொண்டால் வலி வரும் போதெல்லாம் வலி நிவாரணியாக பயன்படுத்தலாம்.

அதுமட்டும் அல்லாமல் நொச்சி இலையோடு வேப்பிலை கலந்து எரித்து புகையை விட்டால் வீட்டில் கொசுக்களை விரட்டி அடிக்கலாம்.

கடும் தலைவலி இருந்தாலும்கூட, இந்த இலைகளை, எரித்து அதன் புகையை சுவாசித்தாலே, தலைவலியும், தலைபாரமும் சேர்த்து குணமாகும்.. ஆஸ்துமாவைகூட இந்த இலைகள் விரட்டக்கூடியது என்பதால், மிளகு, பூண்டு, கிராம்பு இவைகளை, நொச்சி இலைகளுடன் வைத்து மென்று தின்றாலே ஆஸ்துமா மெல்ல விலகும்.

கை, கால் முட்டி வலி இருந்தாலும்கூட, இந்த இலையை கசக்கி துணியில் வைத்து கட்டினாலே, அந்த வலிகள் மெல்ல குறைய துவங்கும்.

முசுமுசுக்கை கீரை: முசுமுசுக்கைக் கீரையையும் சமையலில் சேர்த்து வரலாம்.. இந்தக்கீரை சளி, இருமல் சம்பந்தமான எல்லாத் பிரச்சனைகளை போக்க வல்லது. உடலில் உள்ள சளியை அறுத்து வெளித்தள்ளுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காய்ச்சல், சளியுடன் கூடிய காய்ச்சல் நாக்குச் சுவையின்மை, மற்றும் சீதளத்தினால் ஏற்படும் ஜலதோஷத்தை இந்த கீரை நீக்கவல்லது. இதைத் தவிர இருமல், கபம், சளி மற்று சளி, இருமல் சேர்ந்த எல்லாத் தொல்லைகளையும் போக்கும்.

கொசுக்கள்: நொச்சி இலையுடன் வேப்பிலையும் சேர்த்து எரித்து புகை போட்டால், கொசுக்களும், சிறுபூச்சிகளும் ஓடிவிடும்.. அதேபோல, நொச்சி இலைகள் வயிற்றிலுள்ள பூச்சிகளை அழிக்கக்கூடியது.. கொடிய பாம்பின் விஷத்தையும் முறிக்கக்கூடியது.. பருக்கள், கொப்புளங்கள், அல்லது தேமல்களுக்கு இந்த இலையின் சாறு மட்டுமே போதும்.

தலைவலியைத் தீர்க்கும் தலையணை..! நொச்சி இலை தலையணை செய்யும் முறை..!

நீண்ட நாட்களாக எதற்கு என்றே தெரியாமல் அடிக்கடி வரும் தலைவலி,தலையில் நீர் கோர்த்து தலை பாரமாக இருப்பதற்கு எந்த ஒரு மருந்து மாத்திரையும் இன்றி இந்த நொச்சி தலையணையை பயன்படுத்தினால் மட்டுமே இவை அனைத்தும் சரியாகிவிடும்.

தலைவலி மற்றும் சைனஸ் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக்கூடிய நொச்சி இலை மூலிகையின் மூலமாக செய்யப்படும் தலையணை. முதலில் நொச்சி இலையை தலையணை செய்வதற்கு தேவையான அளவிற்கு பறித்து தனித்தனி இலையாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெறும் தலையணை உரையை எடுத்து அதில் பறித்து வைத்த நொச்சி இலையை போட வேண்டும்.

பின்னர் அதன் மீது சிறிதளவு பச்சரிசியை போட்டுக்கொள்ள வேண்டும். அதாவது நொச்சி இலை ஒரு முறை, பச்சரிசி ஒரு முறை என மாறி மாறி போட வேண்டும்.

பின்னர் அதன் மீது சிறிதளவு பச்சரிசியை போட்டுக்கொள்ள வேண்டும். அதாவது நொச்சி இலை ஒரு முறை, பச்சரிசி ஒரு முறை என மாறி மாறி போட வேண்டும்.

இந்த தலையணையை இரவில் தூங்கும் பொழுது தினமும் பயன்படுத்தி வந்தால் நீண்ட நாள் தலைவலி, சைனஸ் பிரச்சனை, பின்பகுதியில் ஏற்படும் கழுத்து வலி, தலைபாரம் என அனைத்தும் சரியாகிவிடும்.

இப்படி இந்த தலையணையை ஒருமுறை செய்து வைத்துக் கொண்டால் மாதம் ஒருமுறை மட்டும் இலையை எடுத்துவிட்டு மீண்டும் புதிய இலையைப் போட்டு பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது ஒரு மாதம் வரைக்கும் இந்த நொச்சி இலை மூலிகை தலையணை பயன்படுத்திக் கொள்ளலாம்.


கொதிக்கும் நீரில், நொச்சி இலையுடன் கற்பூரவல்லி இலையையும் சேர்த்து, ஆவி பிடித்தாலே, இறுகி கிடக்கும் நெஞ்சு சளி கரைய ஆரம்பிக்கும். வேப்பிலையை போலவே, இந்த இலையையும் நீரில் சேர்த்து குளித்து வந்தால், உடல் வலி தீர்ந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.

உங்கள் வீட்டிலும் நொச்சி வளர்க்க நினைத்தால் ஒரு கிளையை வெட்டி வைத்தால் கூட நன்றாக வளரும். இதனை வீட்டில் வளர்ப்பதால் பல்வேறு சிகிச்சைகளை செய்வதற்கு உதவியாக இருக்கும். நொச்சியினை நாம் வளர்க்க வேண்டியது அவசியம். இவை மிக எளிதாக வளரக்கூடியது. நுரையீரலின் நண்பன் என்று சொல்லக்கூடியதுதான் நொச்சி இலைகள்.

https://tamil.samayam.com/lifestyle/home-remedies/amazing-health-benefits-and-uses-of-nochi-leaves/articleshow/76334367.cms?story=3

https://tamil.oneindia.com/health/do-you-know-amazing-health-benefits-of-nochi-leaves-and-nochi-leaf-is-the-best-herbal-for-lungs-549395.html


 

No comments:

Post a Comment